
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அவர் வெட்கப்படும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்கா கர்நாடக மாநிலத்தில் பிறந்தாலும் அதன் பிறகு அவரது பெற்றோர்கள் சென்னைக்கு மாறியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் என கூறப்பட்டாலும், அது முழுக்க முழுக்க வதந்தி என்பதை பிரியங்கா உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இன்றைய நிலையில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர், தி வால், அண்டகா கசம், ஊ சொல்றியா ஊஊ சொல்ரியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அதில் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரியங்கா மற்றும் பிரவீன்குமார் திருமன புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதில் பிரவீன் தாலி கட்டும்போது அதை வெட்கத்துடன் குனிந்து தாலியை பார்க்கும்போது பிரியங்காவின் புகைப்படம் கியூடாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Be the first to comment