
தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றும் வட இந்தியர்கள் தமிழர்களின் பெரும்பாலான வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள் என்றும் பல அரசியல்வாதிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் விஜய் ஆண்டனியின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது:
வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
பிகிலி எதிர்ப்பு
இந்த பதிவுக்கு ஏராளமான எதிர்ப்பு கமெண்ட்ஸ்களும் ஒரு சில ஆதரவு கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டு வாலிபர்களையே ஓட ஓட விரட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை ஏற்றுக் கொள்வதாக சிலர் அவருக்கு ஆதரவாகவும் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
பிகிலி எதிர்ப்பு
— vijayantony (@vijayantony) பிப்ரவரி 12, 2023
Be the first to comment