TheNewsRecorder.in

Tamil actress says about her husband propose to another actress biggboss mr and mrs chinnathirai vijay tv – தமிழ் News


எனது கணவர் வேறு எந்த பெண்ணுக்காவது புரபோஸ் செய்தால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் என தமிழ் நடிகை ஒருவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகையுமான சுஜா வருணி தம்பதிகள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் விருந்தினராக பிக்பாஸ் லாஸ்லியா கலந்து கொண்ட நிலையில் அவரிடம் புரபோஸ் செய்ய வேண்டும் என்ற டாஸ்க் சிவாவுக்கு கொடுக்கப்பட்டது. அதில் சிவா, லாஸ்லியாவை பார்த்து கூறியபோது, ​​’நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் சிரித்தால் சின்ன சின்ன பற்கள் மிகவும் அழகாக இருக்கும், இரவு என்னால் தூங்க முடியாது, உங்களுடைய பற்கள் நட்சத்திரங்கள் போல் கனவில் வரும்.

வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு ஆசைதான், உங்கள் கையை கோர்த்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும் எவ்வளவு தூரம் நடந்து கொள்ள முடியுமோ, அவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டும். நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டும். நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையே லாஸ் ஆகிவிடும் என்று கூறி ஐ லவ் யூ கூறுகிறார். இதனை அடுத்து லாஸ்லியா அவருக்கு ரோஸ் கொடுக்கும் காட்சி உள்ளது.

தனது கணவர் சிவா, லாஸ்லியாவுக்கு காதலை புரொபோஸ் செய்ததை ஜாலியான கொண்டாட்டத்துடன் பார்த்து வந்த சுஜா வருணி கூறியபோது, ​​’சீரியசாகவே இது எனக்கு ஜாலியாக இருக்கிறது. இந்த மாதிரி சிவா யார்கிட்டயாவது புரொபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று கூறினார். அப்போது டிஜே பிளாக், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற பாடலை ஒலிக்க அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.





Source link

Exit mobile version