
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரலாற்று சம்பந்தமான காட்சிகளுக்காக சூர்யா தற்போது வேற லெவலில் தயாராகி வருகிறார்.
1000 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திர காட்சிகளின் படப்பிடிப்பிற்கு முன் அவர் தனது உடலை இறுக்கமாக வைக்க வேண்டும் என்பதற்காக வேறு லெவலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘சூர்யா 42’ படத்திற்காக சூர்யா இவ்வளவு மெனக்கெடுக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மனிதன் ❤️❤️❤️❤️ @Suriya_offl அண்ணா ❤️❤️❤️#சூர்யா42 🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/p6ZtEv1A6N
— ஸ்டுடியோ கிரீன் (@StudioGreen2) பிப்ரவரி 11, 2023
Be the first to comment