Nayanthara kiss to shahrukkhan video viral – தமிழ் News


சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஷாருக்கான் சென்னை வந்த நிலையில் தற்போது நயன்தாராவின் குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்துள்ளார்.

சிறிது நேரம் நயன்தாராவின் வீட்டிலிருந்து அவர் பின் விடை பெற்று செல்லும்போது கார் வரை அவரை நயன்தாரா சென்று வழியனுப்பி வைத்தார். அதன் பின் ஷாருக்கான் காரில் ஏறும்போது அவருக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*