
மிகச்சிறந்த உணர்ச்சிகரமான தெய்வீக டிராமா திரைப்படம் ‘மாளிகப்புரம்’ பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய ‘மாளிகப்புரம்’ திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இந்தப் படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம் பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி வழங்கப்படுகிறது.
சபரிமலை பற்றி பரிசோதித்தவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின் அருமையை உணர்த்தும் கடவுள் கருத்தை மறுவிளக்கம் செய்வதே ‘மாளிகப்புரம்’. குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார்.
சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், டிஜி.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா, பி.கே.ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
ஆன் மெகா மீடியா மற்றும் காவ்யா பிலிம் நிறுவனம் சார்பில் பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து தயாரித்துள்ளனர்
Be the first to comment