
ஏற்கனவே நயன்தாரா நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றை கடுமையாக விமர்சனம் செய்த மாளவிகா மோகனன் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருப்பது மீண்டும் அவரை வம்புக்கு இழுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நயன்தாரா ஹாஸ்பிடல் சீனில் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு நடித்தார் என்றும் ஹாஸ்பிடல்ஸ் சீனில் யாராவது இப்படி நடிப்பார்களா என்றும் கேலி செய்திருந்தார். இதற்கு நயன்தாரா பதிலடி கொடுத்த போது ‘ஹாஸ்பிடல் சீன் என்றால் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டுதான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே என்றும் கமர்சியல் படம் என்று அதற்கேற்ற மாதிரி தான் காட்சிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன், ‘லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை, நடிகைகளையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம், லேடி என்ற சொல் தேவையில்லை என்றும் தெரிவித்தார். குறிப்பாக பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோர் சூப்பர் ஸ்டார் தான் என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து நயன்தாராவை தான் அவர் மறைமுகமாக சொல்வதாக நயன்தாராவின் ரசிகர்கள் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ‘நான் நயன்தாரா மீது எனக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், அவர் ஒரு சீனியர் நடிகை, அவரின் வளர்ச்சி அசாத்தியமானது, அவருடைய பயணத்தை வியந்து பார்க்கிறேன், தயவு செய்து இதை நயன்தாராவுக்கு சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Be the first to comment