Keerthi Suresh in vera level workout video viral in instagram – தமிழ் News


தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.

ஏஎல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் புல் தரையில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். விலங்கு ஓட்டம் என்ற வகையான இந்த வொர்க் அவுட் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*