Kavin says about kamal hassan meet dada aparna dass – தமிழ் News


உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசை பெற்றதை ஒரே வரியில் கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

நடிகர் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடித்த ‘டாடா’ திரைப்படம் நேற்று வெளியானது இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

கவினின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக ‘டாடா’ படம் அமைந்துள்ளதை அடுத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து அவர் ஆசி பெற்றுள்ளார். ‘டாடா’ வெற்றிக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்திய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கவின், ‘இன்று கோவிலுக்கு சென்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் ‘ஆண்டவர்’ என்று கூறிவரும் நிலையில் கவின் ஒரே வரியில் கோவிலுக்கு சென்று ஆண்டவரை சந்தித்தேன் என்று கூறியிருப்பது கமல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*