
ராஜஸ்தானில் நேற்று நடந்த திருமண விழாவில் கமலஹாசன், அமீர்கான், கரன்ஜோகர், பிருத்திவிராஜ் சுகுமாரன், அக்ஷய்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் மாதவன் அவர்களின் மகன் கெளதமுக்கு நேற்று ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த விழாவில் உலகநாயகன் கமலஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரித்விராஜ் சுகுமாரன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார், அமீர்கான், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கமலஹாசன் பட்டு வேஷ்டி பட்டு சட்டையிலும் மோகன்லால், அக்சயகுமார் ஆகியோர் டிரெடிஷனல் உடையிலும் காணப்பட்டனர். மேலும் அமீர்கான் வாக்கிங் ஸ்டிக் உடன் வந்ததை பார்த்து என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Be the first to comment