
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் ‘வலிமை’. இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ராஜேஷ் ராஜா என்ற சினிமா உதவி இயக்குனர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘கடந்த 2019 ஆம் ஆண்டு நான் நடித்து தயாரித்த ‘தங்கசங்கலி’ படத்தின் குறும்படத்தில் உள்ள 10 காட்சிகள் ‘வலிமை’ படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘வலிமை’ ரிலீஸாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் இந்த புகார் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Be the first to comment