Dada director Ganeshbabu next movie official announcement – தமிழ் News


கவின், அபர்ணா தாஸ் நடித்த ‘டாடா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டு உள்ளார்.

கணேஷ் பாபு இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படம் நிச்சயம் திருப்திகரமான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘டாடா’ இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளதாக புகைப்படத்துடன் அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் லைகா வெளியிட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் ‘டாடா’ படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளது. மேலும் ‘டாடா’ திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் அவரது அடுத்த திரைப்படத்தின் மிகப்பெரிய இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை பார்த்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘ரன் பேபி ரன்’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஜியன் கிருஷ்ணமூர்த்திக்கும் ஒரே வாரத்தில் அடுத்த படம் ஒப்பந்தமானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*