
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பெற்றோர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் அஸ்வின் என்பது சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது தெரிந்தது.
ஐபிஎல் போட்டியை பொருத்தவரை அஸ்வின் கடந்த 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணியில் இணைந்த அஸ்வின் அதன் பிறகு ராஜஸ்தான் ராயல் அணிக்காகவும் விளையாடினார்.
பந்து வீச்சில் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கும் அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டராகவும் இந்திய கிரிக்கெட் அணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஸ்வின் தனது நீண்ட கால தோழியான ப்ரீத்தி நாராயணன் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா மற்றும் ஆத்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அஸ்வின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் சிறு வயதில் இருந்த இவருக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்ததும், அந்த ஆசை பின்னாளில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment