Azeem and Vikraman biggboss kondattam promo video – தமிழ் News


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் அசீம் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்றும் பார்த்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களே அசீமின் வெற்றி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்கள் என்பதும் குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றது என்றும் இருவரது பேட்டிகளிலும் அனல் பறந்தது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஒவ்வொரு சீசனும் பிக்பாஸ் முடிந்தவுடன் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அசீம்ன் மற்றும் விக்ரமன் நேரடியாக மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கேள்வி வந்து அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படும்போது விக்ரமனுக்கு வந்த கேள்வி ‘வதந்திகளை பரப்பி விடுவது யார்? என்பதுதான். அதற்கு பதில் அளித்த அவர் ‘அசீம்’ என்று கூறினார். உடனே ‘வதந்திகளை அதிகம் பரப்பி விடுபவரே இந்த பதிலை சொல்வது எனக்கு சிரிப்பாக வருகிறது’ என்று அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சக போட்டியாளர்களில் யாரை பற்றி புக் எழுதுவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ஜனனியை பற்றி எழுதுவேன் என்று அசீம் கூறினார். மணிகண்டனிடம் நீங்கள் யாருடன் டேட்டிங் செல்வீர்கள் என்று கேட்டபோது குயின்சியை கூறினார். இந்த புமோ வீடியோ வைரலாகி வருகிறது.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*