
தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தகவல்கள் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்த அபிராமி வெங்கடாச்சலம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அபிராமி தனது சமூக வலைதளத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காஷ்மீரில் தற்போது படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, மாதவனின் ‘தி ராக்ட்டரி’, உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment