Aiswarya rajinikanth in update of laal salaam rajinikanth vikranth vishnu vishal – தமிழ் News


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘லால் சலாம்’ படம் குறித்த செம அப்டேட்டை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்து, வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’.

இந்த படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் ஒரு இஸ்லாமிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் செட் ஒர்க் பணிகள் தொடங்கும் நிலையில் அது குறித்த பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அண்ணாமலையார் அருள் ஆசியுடன் செட் ஒர்க் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செட்வொர்க் பூஜை குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார். செட்வொர்க் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*