Aiswarya Rajesh next movie Soppana Sundari release information – தமிழ் News


அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வெளியான ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம், அதன்பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ அடுத்த வாரமே வெளியான ‘ரன் பேபி ரன்’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. என்பதும் அது மட்டும் இன்றி வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ​​’மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ ‘இடம் பொருள் ஏவல்’ ‘ஃபர்ஹானா’ ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எல்ஸ் கேர்ள் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*