
நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென வெள்ளை நிறத்தில் துளியும் கிளாமரும் இன்றி சேலை காஸ்டியூமில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கிளாமரான புகைப்படங்கள் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது பாலோயர்களை திருப்திப்படுத்திய ரம்யா பாண்டியன் தற்போது வெள்ளை நிறத்தில் சேலை மற்றும் பிளவுஸ் காஸ்டியூம் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். துளி கூட கிளாமர் இல்லாமல் இருக்கும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களையும் ரசிகர்கள் லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவில் கேப்ஷனாக அவர் பதிவு செய்திருப்பதாவது:
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உந்தன் நிறமே
மழையில் முளையும் தும்பி நிறமே
இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் மம்முட்டி உடன் நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவர் ‘இடும்பன்காரி’ படத்தில் நடித்து வருகிறார்.
Be the first to comment