Actor Murali daughter and Atharva sister photos viral in internet – தமிழ் News


மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா என்பதும் இவர் தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர் என்பதும் தெரிந்ததே. ஆனால் நடிகர் முரளியின் மகள் குறித்து பலர் கேள்விப்படாத நிலையில் அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் கடந்த 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் முரளி. கே.பாலச்சந்தரின் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் ‘பூவிலங்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான முரளி, அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக ‘கீதாஞ்சலி’ ‘பாலம்’ ‘புது வசந்தம்’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முரளி நடித்த ‘இதயம்’ திரைப்படம் இன்றளவும் காதலர்களுக்கு ஒரு பாடம் சொல்லும் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் முரளி தனது 46வது வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் தற்போது நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் அதர்வாவின் சகோதரி காவியாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது குடும்ப புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. நடிகர் முரளியின் மகளா இவர்? என பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்

நடிகர் முரளியின் இளையமகன் ஆகாஷ், விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகள் சினேகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*