Actor Atharva next movie Thanal first look poster released – தமிழ் News


நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாக வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மகன் அதர்வா, ‘பாணா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ‘பரதேசி’ ‘இரும்பு குதிரை’ ‘ஈட்டி’ ‘கணிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘தணல்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவீந்திர மாதவ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஜான் பீட்டர் என்பவர் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதர்வாவுடன் அஸ்வின், லாவண்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*